tamilnadu

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் சசீந்திரன் பேட்டி

 திருப்பூர், பிப். 20 – திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே நடந்த விபத்தில் உயிரிழந் தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட் சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும், முதல் கட்டமாக ரூ.2 லட்சம் உடன டியாக வழங்கப்படும் என்றும் கேரள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சசீந்திரன் தெரிவித்தார். திருப்பூர் அரசு மருத்துவமனை யில் விபத்தில் உயிரிழந்தோர் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அங்கு வந்த கேரள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சசீந்திரன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: அவி நாசி அருகே கேரள அரசு பேருந் தும், கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.  இவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற் கும் ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். தற்போது முதல் கட்டமாக ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மீதித் தொகை அடுத்த கட்டமாக வழங்கப்படும். அரசு பேருந்து ஓட்டு நர்களின் குடும்பத்தாருக்கு போக்கு வரத்துத் துறை சார்பில் இன்சூ ரன்ஸ் தொகை ரூ. 30 லட்சம் வழங் கப்படும் என்றும் அவர் தெரி வித்தார். முன்னதாக கேரள மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் சுனில்குமார் செய்தியாளர்களை சந் தித்தபோது, விபத்து மீட்புப் பணி களை மேற்கொள்வதில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் செயல்பட்டதால் உயிரிழப்பு அதி கமாவது குறைக்கப்பட்டதாகவும், அதேபோல் உடல்களை பிரேத பரி சோதனை செய்து கேரள மாநிலத் திற்கு அனுப்புவதிலும் முழுவீச்சு டன் செயல்பட்டதாகவும் பாராட்டு தெரிவித்தார். விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், எந்த தாமதமும் இன்றி உடனடியாக பிரேத பரிசோ தனைகள் முடிக்கப்பட்டு கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டதாக வும், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் ஹேம்ராஜ் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவரிடம் விபத்துக்கு காரணம் குறித்து விசாரணை மேற்கொள் ளப்படும் என்றும் தெரிவித்தார். லாரியின் டயர் வெடித்தது விபத் துக்கு காரணம் என தெரிவிக்கப் பட்டிருந்த நிலையில் அது குறித்து ஆய்வு செய்ய போக்குவரத்துத் துறைக்கு பரிந்துரை செய்ததாகவும் அவர் கூறினார்.

;