tamilnadu

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குட்டைகளை இணைக்க கே.சுப்பராயன் எம்.பி., கோரிக்கை

திருப்பூர், ஜூலை 2 – அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் திருப்பூர் வடக்குத் தொகுதிக்கு உட்பட்ட பகு திகளில் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய முக்கியமான குட்டைகள் விடுபட்டுள்ளன. அவற்றை இத்திட்டத்தில் இணைத்து பணி களை நிறைவேற்றுமாறு திருப்பூர் நாடா ளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில் முக்கிய குட்டைகளை இணைக் கும் விதமாக ஒரு துணைத் திட்டத்தை விரைந்து உருவாக்கி செயல்படுத்திடுமா றும் கே.சுப்பராயன் கேட்டுக் கொண்டுள் ளார். குறிப்பாக, திருப்பூர் வடக்குத் தொகுதி தொரவலூர் ஊராட்சியில் ஆண்டிபாளை யம் குட்டை,  கருப்பராயன் கோயில் குட்டை, வாரணவாசிபாளையம் சூளைக்குட்டை, வண்ணாங்குட்டை, செட்டியார் கோயில் குட்டை, சுடுகாட்டுக் குட்டை, மூங்கில்பா ளையம் பாமடைக்குட்டை, கந்தம்பாளை யம் எரங்காடு குட்டை, கந்தம்பாளையம் ஆதிதிராவிடர் காலனி குட்டை, கந்தம்பா ளையம் குட்டை, மூங்கில்பாளையம் சுடு காட்டுக் குட்டை, சொட்டமேடு குட்டை, புதுக்காடு குட்டை, கோவில் செரைக் குட்டை, ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு  உட்பட்ட அப்பியாபாளையம் பெரியதோட் டம் குட்டை, ஆதிதிராவிடர் காலனி தலை யாரித் தோட்டக் குட்டைகள், அப்பியா பாளையம் சீரங்கபிள்ளையார் தோட்டம் குட்டை, கருக்கன்தோட்டம் குட்டை, வள்ளி புரம் ஊராட்சி கச்சங்காடு குட்டை,

செட்டிக் காடு குட்டை, வணங்காமுடியனூர் குட்டை, குட்டை மாரிம்மன் கோயில் குட்டை, ஒட்ட வாக்குளம், தொட்டியவலசு குட்டை, கரிங்கராயன்பாளையம் பொங்கியண் ணன் குட்டை, சந்தையாபாளையம் புரவி யாத்தா கோவில் குட்டை, அவரப்பாளை யம் அசோக்குட்டை, தொரவலூர் கோட்டை முனியப்பன் கோவில் குட்டை ஆகிய 28 குட்டைகளை இணைக்க வேண்டும்.  இந்த பகுதி நீண்ட காலமாக மழை மறை வுப் பகுதியாக இருக்கிறது. எனவே இத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் குடிநீர் ஆதா ரமும், விவசாய ஆதாரமுமாக இருக்கும். ஆழ்குழாய்களிலும், கிணறுகளிலும் நீர்மட் டம் உயர வாய்ப்பு உள்ளது. எனவே துணைத் திட்டத்தை நிறைவேற்ற வேண் டும் என கே.சுப்பராயன் கூறியுள்ளார்.

;