tamilnadu

ரூ. 5 லட்சத்திற்கு கருப்பட்டி ஏலம்

திருப்பூர், ஜூலை 29 - குன்னத்தூரில் உள்ள திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப் பட்டி உற்பத்தியாளர் சம்மேளனத்தில் திங்க ளன்று கருப்பட்டி ஏலம் நடைபெற்றது. இதில், 3 ஆயிரம் கிலோ தென்னங் கருப்பட்டியும், 1000 கிலோ பனங்கருப்பட்டியும் விற்பனைக்கு வந்திருந்தன. இந்நிலையில், தென்னங் கருப்பட்டி கிலோ ஒன்றுக்கு  ரூ. 100க்கும், பனங்கருப் பட்டி கிலோ ஒன்றுக்கு ரூ. 170க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 5 லட்சத்துக்கு கருப்பட்டி ஏலம் நடைபெற் றது.