tamilnadu

திருப்பூர் நகைக்கடைகளில் வருமானவரித் துறையினர் சோதனை

திருப்பூர், ஜன. 14 – திருப்பூரில் உள்ள பிரபல நகைக் கடைகளில் வருமான வரித் துறை யினர் சோதனை நடத்தினர். திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் ரோட்டில் உள்ள நடராஜ் செட்டி யார் ஜூவல்லரி, ஈஸ்வரன் கோவில்  வீதியில் உள்ள கந்தவேல் ஜூவல் லரி, மாநகராட்சி வீதியில் உள்ள கே.ஆர்.பி.எஸ். ஜுவல்லரி, மங்கலம் ரோட்டில் உள்ள அம்மன் ஜூவல்லரி ஆகிய 4 பிரபல நகைக் கடைகளுக்கு காலை 10.30 மணிக்கு  வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். ஒவ்வொரு கடைக்கும் ஒவ் வொருக் குழுவாக சென்ற அதி காரிகள், நகை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சோதனை செய்தனர். கடை ஊழியர் களிடமும் விசாரணை மேற்கொண் டனர். மேலும், தங்கம் கொள்முதல் செய்தது, நகைகள் விற்பனை செய்யப்பட்ட ஆவணங்கள், கடையில் இருப்பு உள்ள நகை களின் ஆவணங்கள் மற்றும் வரு மான வரித்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட கணக்குகள், கணினியில் பதிவு செய்யப்பட்ட கணக்கு, விற்பனை போன்றவை குறித்து ஆய்வு செய்தனர். காலையில் தொடங்கிய சோதனை மாலை வரை நடை பெற்றது. சோதனையின் முடிவில்  சில நகைக்கடைகளில் ஆவணங் களை அதிகாரிகள் எடுத்து சென் றுள்ளனர். ஆனால் இந்த சோதனை  ’குறித்த எந்த விவரமும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. 

;