tamilnadu

மேக் இன் இந்தியா திட்டத்தில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்படவில்லை

திருப்பூர், ஆக. 12 - மேக் இன் இந்தியா திட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் எதுவும் வரவில்லை, கூலி வேலைதான் நடைபெறுகிறது. மேக் பை  இந்தியா திட்டமாக இருந்தால் தான் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க முடியும் என்று அகில இந்திய மக்கள் அறிவியல் கூட் டமைப்பின் முன்னாள் தலைவர் டி.ரகுநந்தன் கூறினார். திருப்பூரில் ஞாயிறன்று நிறை வடைந்த 20ஆவது தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாட் டில் அகில இந்திய மக்கள் அறிவி யல் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் டி.ரகுநந்தன் பங்கேற் றார். அவர் தீக்கதிருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: முதலீடு வந்தால் வேலைவாய்ப்பு கிடைக் கும் என்று சொல்கிறார்கள். ஆனால் சூழ்நிலைகள் மாறி னால், லாபம் கிடைக்கும் இடத் துக்கு முதலீடு மாறிப் போய்வி டும். தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதுதான் உண்மையான வேலைவாய்ப்பை உருவாக்கும். தொழில்நுட்பம் வைத்திருந்தால் தான் உலகத்தில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்க முடியும். ஆனால் எந்தவொரு துறையிலும் இந்தியா புதிய தொழில்நுட்பத்தை உரு வாக்கவில்லை.  ஆர்டிபிசியல் இன்டலி ஜென்ஸி எனப்படும் செயற்கை அறிவுக்கூர்மை, ரோபாட், ஆட் டோமேசன் எனப்படும் தானி யங்கி தொழில்நுட்பம், மின் வாகனங்கள், சூரிய சக்தி உற் பத்தி, சூரிய மின் சக்தி தேக்கி உருவாக்கம் என புதிய தொழில் நுட்பங்கள் எதிலும் நாம் முத லீடு செய்யவில்லை. புதிய தொழில்நுட்பம் யாரிடம் இருக் கிறதோ, அவர்களிடம் இருந்து தான் பொருட்களை தொடர்ச்சி யாக பிறர் வாங்கிக் கொண்டே இருப்பார்கள். 1990களில் தனியார் துறையை அனுமதித்தால் புதிய தொழில்நுட்பம் உருவாக்குவதில் முதலீடு செய்வார்கள் என்று சொன்னார்கள். ஆனால் தனி யார் துறை முதலீடு பெருமளவு அதிகரித்திருந்தாலும் தொழில் நுட்பத்திலும், ஆராய்ச்சி மேம் பாட்டுத் துறையிலும் எந்த முன் னேற்றமும் ஏற்படவில்லை. தனி யார் துறை இதில் முதலீடு செய் யாதபோது, அரசுதான் இதற்கு கவனம் செலுத்த வேண்டும். குறிப் பாக தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அரசு அதிக முதலீடு செய்ய வேண்டும். ஆய்வு செய்து புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கி, அதன் மூலம் புதிய பொருட்களை பிராண்ட் செய்து உருவாக்கி னால்தான் வளர்ச்சி ஏற்படும். கூகுள் நிறுவனத்தின் தலைவராக சுந்தர்பிச்சை இருப்பதால் இந்தி யாவுக்கு என்ன நன்மை? தொழில் நுட்பங்கள் அந்த நிறுவனத்திடம் இருக்கிறது. நம்மிடம் புது தொழில் நுட்பம் இருக்க வேண்டும். மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் என வீட்டு உபயோகப் பொருட்களில் இனி வரும் காலத் தில் 5 ஜி சிப் வைத்து இயக்கும் நிலை வரப்போகிறது. அந்த தொழில்நுட்பம் நம்மிடம் இல்லா தபோது, நாம் அந்த தொழில் நுட்பம் வைத்திருப்பவர்களிடம் பொருட்களை வாங்கக் கூடிய வர்களாகத்தான் இருப்போம். இந்தியா நீண்ட காலமாக கட்டுப்படுத்தப்பட்ட சந்தையாக இருந்ததால், போட்டியின்றி புதிய தொழில்நுட்பம் வளரவில்லை. இப்போது இந்தியாவில் ஆராய்ச் சித் துறையில் முதலீடு செய்தால் 135 சதவிகிதம் வரிச்சலுகை தரப் படும் என கூறப்பட்டுள்ளது. இருப் பினும் முதலீடு வரவில்லை. மேக் இன் இந்தியா என்பது அசெம்பிளிங்  இன் இந்தியா என்ற அளவில்தான் கூலி வேலை யாக நடைபெறுகிறது. அதை மேக் பை இந்தியா என இந்தி யாவில் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் புதிய கண்டுபிடிப்புகள், பொருட்களை தயாரிக்க வேண் டும். முதலில் ஆராய்ச்சி மேம் பாட்டுத் துறைக்கு முதலீடு செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்களை பங்குதாரர்க ளாக சேர்க்க வேண்டும், சமூக தணிக்கை என நிதி ஒதுக்குவதற் குப் பதிலாக, ஆராய்ச்சி மேம்பாட் டுப் பணிக்கு 5 சதவிகிதம் நிதி ஒதுக் கலாம். அரசு இதுபோன்ற நடவ டிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்தியாவில் புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கி வளர்க்க முடியும். இவ்வாறு டி.ரகுநந்தன் தெரிவித்தார்.

;