திருப்பூர், நவ. 3 - திருப்பூர் தெற்கு மாநகரம் பெரிச்சிபாளை யத்தில் அனைத்து வகை மாற்று திறனாளிகள் சங்க புதிய கிளை ஞாயிற்றுக்கிழமை அமைக்கப் பட்டது. இப்பகுதியைச் சேர்ந்த லோகநாதன் தலை மையில் நடைபெற்ற கிளை அமைப்புக் கூட்டத் தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.ராஜேஷ், தெற்கு மாநகரத் தலைவர் ஏ.ஷகிலா, தெற்கு மாந கரச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் நோக் கம், செயல்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினர். இதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிக ளுக்கான சக்கர நாற்காலி, ஸ்டிக், கடனுதவி மற்றும் அனைத்துற உறுப்பினர்களுக்கும் அடை யாள அட்டை வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இதில் 20 பேர் கலந்து கொண்டனர். புதிய கிளையின் தலைவராக ஈஸ்வரமூர்த்தி, செயலாளராக லோகநாதன், பொருளாளராக வெங்கடாசலம், துணைத் தலைவராக நந்தகுமார், துணைச்செயலாளராக சுமதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.