tamilnadu

img

காப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக விவசாயிகளை தாக்கிய காவல்துறை ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்டாட்சியரிடம் வலியுறுத்தல்

இப்பேச்சுவார்த்தையின் போது, காவல்துறை ஆய்வாளர் ஓம்பிரகாஷ் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியது தவறு என்று விவசாயிகள் கூறியபோது, மிகவும் ஆத்திரமடைந்த ஆய்வாளர், என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிட்டால் விவசாய சங்கத்தினர் பொது வாழ்க்கையை விட்டுச் செல்ல வேண்டும் என்றார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் கூட்டத்தை அமைதிப்படுத்தினார் கோட்டாட்சியர். அப்போது காவல்துறை ஆய்வாளர் விவசாயிகளை தாக்கியது மற்றும் பெண்களை தவறான வார்த்தைகளில் பேசிய வீடியோ உள்ளது. அதை கோட்டாட்சியரிடம் தருவதாக விவசாயிகள் கூறினர். கோட்டாட்சியர் முன்னிலையில் காவல்துறை ஆய்வாளர் ஓம்பிரகாஷ், விவசாயிகளை மிரட்டும் படி பேசியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உடுமலை, ஜன. 30- கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக விவசாயிகளைத் தாக் கிய காவல் ஆய்வாளர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வரு வாய் கோட்டாட்சியரிடம் முறை யிட்டனர். திருப்பூர் மாவட்டம், ஆமந்த கடவு ஊராட்சியில் பல தலை முறைகளாக விவசாயிகள் பயன் படுத்திவரும் வண்டிப்பாதை உள் ளது. இத்தடத்தில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் தனியார் மின் உற்பத்தி நிறுவனம் மின் கம்பம் நடுவதை அண்மையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் மீது கடு மையான தாக்குதலை காவல் துறை நடத்தியது.  இதனைக் கண்டித்து விவசா யிகள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைமையில் புத னன்று போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் கோட்டாட் சியர் 30ஆம் தேதி உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என் றார். இதனையடுத்து போராட் டம் முடிவுக்கு வந்தது.  இந்நிலையில் உடுமலை வரு வாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் தலைமையில் வியாழனன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் விவசாய சங்க நிர்வாகிகள், வரு வாய் துறையினர், காவல்துறை யினர் மற்றும் மின்சாரம் தயாரிக் கும் அதானிக்கு சொந்தமான கார்ப்பரேட் நிறுவனமான வாட் ஸன் இன்ப்ராபில்ட் (பி) லிட் நிறுவனத்தின் ஊழியர்கள் மற் றும் அப்பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் பேசிய விவ சாயிகள் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகளை காட்டு மிராண்டி தனமாக தாக்கிய காவல்துறையை கண்டிப்பதாக வும், இது போன்ற செயல் உடு மலை பகுதியில் நடைபெற்றது இல்லை. எனவே உடனடியாக தவறு செய்த காவல்துறை அதி காரிகள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்ற னர். மேலும், விவசாயிகள் பயன் படுத்தி வரும் வண்டி பாதையில் மின் கம்பம் நடக்கூடாது என்றும், தனியார் நிறுவனத்திற்கு ஆதர வாக ஐந்து தலைமுறையாக பயன்படுத்தி வரும்  விவசாய நிலங் களில் உள்ள எல்லை கற்களை அகற்றிய வருவாய் துறை மீண் டும் எல்லை கற்களை நட வேண் டும் என்றனர். இதன் பின்னரும் விவசாய நிலங்களில் மின் கம்பங் களை அமைத்தால் உரிய இழப் பீடு தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைக் கேட்ட கோட்டாட் சியர், சூரிய மின்சாரம் தயாரிக்கும்  வாட்ஸன் இன்ப்ராபில்ட் (பி ) லிட் நிறுவனம் எந்த பகுதிகளில் மின் கம்பங்கள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது என்றும், இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார். பின்பு வரு வாய் துறை அதிகாரிகள் அப்ப குதியை ஆய்வு செய்து இரண்டு நாட்களுக்குள் தர வேண்டும் என்று உத்திரவிட்டார். அது வரை தனியார் நிறுவனம் மின் கம்பம் நடுவது உள்ளிட்ட எந்த வேலை களையும் செய்யக்கூடாது என் றார். இந்த கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெய சந்திரன், குடிமங்கலம் காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ், வட்டாட் சியர் தயானந்தன், தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் சார்பில் வெ.ரங்க நாதன், லட்சுமணசாமி, சுந்தர் ராஜ், தங்கவேல், ஜெகதீஸ், ரங்க ராஜ் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

;