திருப்பூர், அக். 8- திருப்பூரில் 8 மாத காலமாக விவசாயி கள் குறைதீர் கூட்டம் நடக்காத நிலையில் உடனடியாக விவசாயிகள் குறைதீர் கூட் டத்தை நடத்தக் கோரி கட்சி சார்பற்ற விவ சாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த னர். இதுகுறித்து கட்சி சார்பற்ற விவசாயி கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் அளித்த மனுவில் தெரிவித் துள்ளதாவது, கொரோனா நோய்த்தொற்று பரவலை தவிர்க்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் 8 மாத காலமாக திருப்பூர் மாவட் டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால், விவசாயி கள் தங்கள் குறைகளை மாவட்ட நிர்வா கத்திற்கு தெரியப்படுத்த இயலாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் தங்கள் வழக்கமான பணிகளுக்கு அதிக அளவு லஞ்சம் மற்றும் ஊழல் முறைகேடு களை எதிர் கொள்கின்றனர். எனவே, இதனை மாவட்ட நிர்வாகத்தின் கவனத் திற்கு கொண்டு செல்லும் வகையில் உட னடியாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், ஒரு வருட காலமாக காங்கேயத்தில் செயல்பட்டு வரும் கரி தொட்டி தொழிற்சாலையை அப் புறப்படுத்த கோரிக்கை வைத்தும் நிறை வேற்றாததை சுட்டிக் காட்டி வருகின்ற நவம் பர் 2-ஆம் தேதியன்று காங்கேயம் வட்டாட் சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அம்மனு வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.