tamilnadu

இலவச ஹோமியோ மருத்துவ முகாம்

திருப்பூர், செப். 4- கொரோனா நோய்த் தாக்குதலில் இருந்து தற் காத்துக் கொள்ள ஹோமியோ நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் ஆர்சனிக் ஆல்பம் மருந்து ஜவகர் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் பொது மக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங் கப்பட்டது. வியாழனன்று காலை ஜவகர்நகர் மற்றும் சுற்றுப் புறக் குடியிருப்புகளில் 300 பேருக்கு வீடு வீடாக இம் மருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் குடியிருப் போர் நலச் சங்கத் தலைவர் சீனிவாசன், செயலாளர் திரு வேங்கடம், துணைச் செய லாளர் மனோகரன், செயற் குழு உறுப்பினர்கள் தேவேந்திரன், இளங்கோ, சரவணன் மற்றும் உறுப்பி னர்கள் உடனிருந்தனர்.