திருப்பூர், பிப். 17 - தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மாறாக மோசடியாக பஸ் கட்டணப் பட்டியல் உருவாக்கிய போக்குவரத்து அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது. திருப்பூர்- முதலிபாளையம், மானூர் அருகே ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த ஜி.எஸ்.பால்பாண்டியன் என்பவர் திங்க ளன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் ஆட்சியர் கே.விஜயகார்த்திகேயனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசுப் போக்குவரத்துக் கழக திருப்பூர் மண்டலத்தில் இயக்கப்படும் பேருந்துகள் வழித்தட எண் 47, 47 சி, 47 டி, 4பி/47பி, 20 ஆகிய பேருந்துகளில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முதல் திருப்பூர் வரை முறையே ரூ.8 வீதமும், 20ஆம் எண் பேருந்தில் ரூ.7ம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் 47 சியில் ரூ.13, 47ல் ரூ.12, 47 பி-யில் ரூ.12, 47 டி-யில் ரூ.14 மற்றும் வழித்தட எண் 20 பேருந்தில் ரூ.12 என கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. வழித்தட எண் 20 ல் இயக்கப்படும் ஆர்கேஜி தனியார் பேருந்து திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வழியாக நால்ரோடு வரை கிராமச் சாலைகளில் இயக்காமல் புறக்கணிக்கின் றனர். அதேபோல் 20ஆம் எண் வழித்தடப் பேருந்தில் ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் வெவ்வேறு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப் படுகிறது. நகரப் பேருந்துகளில் 40 + 40 என்ற இருக்கைகள் எண்ணிக்கைக்கு மாறாக 53 + 40 என்ற அளவில் இருக்கைகள் அமைக் கப்பட்டு இயக்க அனுமதித்துள்ளனர். அதேபோல் 5 கிலோமீட்டர் தூரமுள்ள வழித்தடத்திற்கு ரூ.8, ரூ.9, ரூ.10 என விதவித மாக கூடுதலாக வசூலிக்கின்றனர். இதுபோக திருப்பூரில் இருந்து 230 கிலோ மீட்டர் தூரம் சிவகாசி செல்லும் பேருந்தில் ரூ.230 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கி ருந்து 53 கி.மீட்டர் தூரமுள்ள கோவைக்கு ரூ.36 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வந்த கட்டணங்களை மாற்றி நிர்ண யம் செய்து மக்கள் கருத்துரைக்காக கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 19 அன்று விளம்பர அறிவிப்பு செய்யப்பட்டு ஜன.29 அன்று புதிய கட்டணம் அமலுக்கு வரும் என அறிவிக்கப் பட்டது. ஆனால் இந்த அரசாணைக்குப் புறம்பாக அதிக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். அத்துடன் அரசாணை ஆவணங்களை திருப்பூர் வடக்கு, தெற்கு ஆர்.டி.ஓ.க்கள் திரு த்திய குற்றத்தைச் செய்துள்ளனர். அதே போல் விபத்துக் காப்பீட்டுத் தீர்வையாக வசூ லிக்கப்பட்ட தொகையை தனிக்கணக்கில் வைத்து விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட வில்லை. எனவே இந்த மோசடியைக் களைந்து அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கவும், அதற்கேற்ப கட்டணம் வசூலிப்பதை உறு திப்படுத்தவும், மோசடியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய வேண் டும். அதேபோல் மினி பஸ்களிலும் அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்காமல் பேருந்து கட்டணங்களையே வசூலிக்கின்ற னர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.எஸ்.பால்பாண்டியன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கை சிதைந்த பெண் தொழிலாளி
திருப்பூர் மாவட்டம் காளிபாளையம் குரு வாயூரப்பன் நகரைச் சேர்ந்த ஆர்.சரஸ்வதி (55) என்ற கட்டிடத் தொழிலாளி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது, என் கணவர் என்னைப் பிரிந்து சென்று 25 வருடங்கள் ஆகிவிட்டது, இரு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து கொடுத்து, தனித்தனியாக வசித்து வருகின் றனர். நான் தனியாக கட்டிடக் கூலி வேலை செய்து வருகிறேன். கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி பெரியாண்டிபாளையத்தில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது, கலவை இயந்திரத்தில் எனது வலது கை சிக்கி முழங் கைக்கு கீழ் பகுதி முழுவதும் சிதைந்து போனது. இது தொடர்பாக வீரபாண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள் ளனர். வலது கை சிதைந்த நிலையில் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு மிகவும் சிரமப்படுகிறேன். ரூ.2 லட்சம் சுற்றத் தாரிடம் கடன் வாங்கி மருத்துவச் செலவு செய்தேன். எனவே முதலமைச்சர் நிவாரண நிதியில் உதவித் தொகை பெற்றுத் தரும்படி சரஸ்வதி கேட்டுக் கொண்டுள்ளார்.
எரிவாயு உருளை தொகை
எரிவாயு உருளை வீடுகளுக்கு விநியோ கம் செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பந்தப் பட்ட ஏஜென்ஸிகள் ஒரு உருளைக்கு ரூ.46 வீதம் வழங்க வேண்டும், ஆனால் அந்த ஏஜென்ஸிகள் இத்தொகையைத் தராத நிலையில் எரிவாயு உருளை வழங்கும் பணி யாளர்கள் நுகர்வோரிடம் ரூ.50, ரூ.100 என பெறுகின்றனர். ஏஜென்ஸிகள் தர வேண்டிய தொகையை மறுப்பதால்தான் இந்நிலை ஏற்படுகிறது. எனவே எரிவாயு உருளை விநி யோகம் செய்யும் பணியாளர்களுக்கு உரிய தொகையைத் தராத ஏஜென்ஸிகளின் உரி மத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர் ஊதியத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறைச் செயலா ளர் ஈஸ்வரன் தலைமையிலானோர் ஆட்சி யரிடம் மனுக் கொடுத்தனர். திருப்பூர் காங்கேயம் ரோடு முதலிபாளை யம் பிரிவு வஞ்சிபுரம் புதூர் மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், அப்பகுதியில் உள்ள பனியன் லேபிள் தயா ரிக்கும் தனியார் நிறுவனம் சாயக்கழிவுநீரை பாதுகாப்பற்ற நிலையில் காலி இடத்தில் குழி தோண்டி அதில் தேக்கி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வரு வது குறித்து பலமுறை புகார் கூறியும் நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. அடுத்தக்கட் டமாக ஊர் மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும், எனவே உடனடியாக இப்பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறும் கோரினர்.