tamilnadu

img

மின்மதி ஆப்-இல் சேர சுய உதவிக்குழு உறுப்பினர்களை கட்டாயப்படுத்துவதா?

திருப்பூர், ஜூன் 12 – தமிழகத்தில் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கென்று மாநில அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் உருவாக்கப்பட் டுள்ள “மின்மதி” ஆப்-இல் பெண்க ளைக் கட்டாயப்படுத்திச் சேர்ப்ப தற்கு அனைத்தந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர்.

இது தொடர்பாக, அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சாவித் திரி, மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி, மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்ரா, மாவட்டப் பொருளா ளர் அ.ஷகிலா ஆகியோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தமி ழகத்தில் 32 மாவட்டங்களில் கிரா மப்புறங்களிலும், நகர்ப்புறங்க ளிலும் இணைந்து மொத்தம் 3  லட்சத்து 77 ஆயிரத்து 584 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. இதில், 44 லட்சத்து 21 ஆயிரத்து 734 பேர் அங்கத்தினர்களாக உள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மின் மதி எனும் டிஜிட்டல் போன் ஆப்பில் கட்டாயம் சேர வேண்டும் என மாநில மகளிர் மேம்பாட்டு நிறுவ னம் கடந்த மே 9ஆம் தேதியிட்ட கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள் ளது. ஒவ்வொரு உறுப்பினரும் கட் டாயம் சேர வேண்டும் என்று பணி யாளர்களைக் கொண்டு நிர்பந்தம்  செய்வதை ஏற்க இயலாது. மகளிர் சுயஉதவிக் குழுவில் விருப்பமுள்ள வர்கள் இந்த மின்மதி ஆப்பில் சேர்வ தை யாரும் எதிர்க்கவில்லை.  

குறிப்பாக, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் வேலையிழந்து, உணவுக் குக் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்,  சுயஉதவிக் குழு உறுப்பி னர்கள் மின்மதி ஆப்பை பதிவிறக் கம் செய்து தங்கள் அலைபேசி நம்ப ரைக் காட்டினால்தான், வங்கியில் நேரடிக் கடன் பெற முடியும் என்று பணியாளர்கள் மூலம் மிரட்டி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக் கது. மாநில மகளிர் மேலாண்மை இயக்குநர் இது போன்ற கட்டாயப் படுத்தும் நடவடிக்கையை உடனடி யாக நிறுத்த வேண்டும். மேலும் எந்த நிபந்தனையும் இல்லாமல் அனைத்து சுய உதவிக் குழுக்களுக் கும் வட்டியில்லாத கடன் தொகை உடனடியாக வழங்க வேண்டும்.  அந்தந்த மாவட்டங்களில் நுண் நிதி (மைக்ரோ பைனான்ஸ்) நிறுவ னங்கள் இக்காலத்தில் அனைத்து சுயஉதவிக்குழு பெண்களிடமும் மிரட்டி வட்டி வசூல் செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும். நுண்நிதி நிறுவனங்களைக் கண்காணிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட வேண் டும் என்றும் மாதர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

;