திருப்பூர், மே 18 - கொரோனா ஊரடங்கு காலத்திலும் 50 நாட்களுக்கும் மேலாக உற்பத்தியில் ஈடுபட்டு நாட்டு மக்களுக்கு உணவ ளித்து பாதுகாத்து வரும் விவசாயிகளுக்கு பாராட்டு விழா பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு அறைகூ வலுக்கு இணங்க உழவர் சந்தைகளில் நேரடியாக உழவர்களைச் சந்தித்து வாழ்த்தும் நிகழ்ச்சி திருப்பூரில் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில் தமிழ் நாடு விவசாய சங்கம் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் எஸ். வெங்கடாசலம், எஸ்.கே. கொளந்தசாமி தலைமையில் விவசாயிகளை வாழ்த்தி முழக்கம் எழுப்பப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் கே. பழனிச்சாமி, வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், வி.ச. அவிநாசி கமிட்டி நிர்வாகி பச்சாபா ளையம் பழனிசாமி மற்றும் சிஐடியு, மார்க்சிஸ்ட் கட்சியி னர் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில், தமிழ்நாடு விவசாய சங்கம் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர். குமார் தலைமையில் ஒவ்வொரு அங்காடியாக சென்று விவசா யிகளுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவிக் கப்பட்டது. இந்நிகழ்வில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே. உண்ணி கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் சி. மூர்த்தி, தெற்கு மாநகரச் செயலா ளர் டி.ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். சுந்தரம், சிஐடியு மாவட்ட நிர்வாகி பி. பாலன், விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் பி. துரைசாமி மற்றும் வாலிபர் சங்க தெற்கு மாநகர நிர்வாகிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
தாராபுரம் உழவர் சந்தையில் தமிழ்நாடு விவசாய சங்கம் திருப்பூர் மாவட்டப் பொருளாளர் ஆர். வெங்கட் ராமன் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து கைத்தறி துண்டு அணி விக்கப்பட்டது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் தாராபு ரம் தாலுகா செயலாளர் என். கனகராஜ், சிஐடியு நிர்வா கிகள் முத்துசாமி, பொன்னுசாமி, சுப்பிரமணி, ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் மேகவர்ணம் மற்றும் சீரங்கராயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.