திருப்பூர், செப். 4 – பொங்கலூர் அருகே சக்திநகரில் தொடரும் குடிநீர் பிரச்சனை தொடர் பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அப்பகுதி மக்கள் ஒன் றிய ஆணையரிடம் மனு அளித்தனர். பொங்கலூர் அருகே சக்தி நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏஎல்ஆர் லே அவுட், குல்ஜார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நான்கா யிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக கடும் குடிநீர் தட் டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலை யில் இப்பகுதி குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இக் குடியிருப்பைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 25 பேர் புதன்கிழமை பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்துக்குச் சென்றனர். அங்கு மார்க் சிஸ்ட் கட்சியின் சக்திநகர் கிளைச் செயலாளர் ரங்கராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செய லாளர் ஜி.சுந்தரம் ஆகியோருடன் பொது மக்கள் பொங்கலூர் ஒன்றிய ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவைப் பெற்றுக் கொண்ட ஆணையர், உடனடியாக குடிநீர் பிரச்சனையில் கவனம் செலுத்தி நட வடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். குறிப்பாக அத்திக்கடவு திட்டக் குடி நீர் இங்கு வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப சீரான முறையில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத் தப்பட்டுள்ளது.