tamilnadu

தீபாவளி போனஸ் : நிலுவைத் தொகைகளை விடுவிக்க மத்திய அரசுக்கு டீ சங்கம் கோரிக்கை

திருப்பூர், அக். 4 – தீபாவளி பண்டிகைக்குரிய போனஸ் தொகையை தொழிலா ளர்களுக்கு வழங்க வேண்டிய நிலையில் நிறுத்தி வைக்கப்பட் டுள்ள தொகைகளை மத்திய அரசு உடனடியாக விடுவிக்கும்படி திருப் பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதி யுள்ளது. இது தொடர்பாக திருப்பூர் ஏற்று மதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் மத்திய நிதியமைச் சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப் பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: பின்னலாடைத் துறை ஏற்க னவே பணப்பிரச்சனையில் சிக்கி யுள்ளது. தீபாவளி வருவதற்கு 20  நாட்கள் இருக்கும் நிலையில் இப் போதிருந்தே போனஸ் தர வேண் டிய நிலையில் நிறுவனங்கள் இருக் கின்றன. எனவே இந்த சிக்கலான நிலையைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே இந்நிறுவனங்களுக் குத் தர வேண்டிய டிராபேக், ஆர்ஓ எஸ்எல்., ஐஜிஎஸ்டி போன்ற நிலுவைத் தொகைகளை உடன டியாக விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். சில ஏற்றுமதி நிறுவனங்களை ஆபத்தான நிலையில் உள்ள நிறுவ னங்கள் என வகைப்படுத்தி இருப்ப தால் அவற்றிற்கு வழங்க வேண்டிய டிராபேக், ஐஜிஎஸ்டி, ஆர்ஓஎஸ்எல் நிலுவைகள் தடுத்து நிறுத்தி வைக் கப்பட்டுள்ளன. மேலும் துறைமுகங் களில் இந்நிறுவனங்கள் அனுப்பும் சரக்குகள் நூறு சதவிகிதம் தணிக் கைக்கு உள்ளாக்கப்படுகின்றன. இந்த ஆய்வின்போது சரக்குகளை கலைத்து, கீழே போட்டு, மண்ணாக் கப்பட்டு, முறையாக பெட்டியில் மடக்கி அடுக்காமல், அப்படியே மீண்டும் உள்ளே திணிக்கப்படு கின்றன. இதனால் வெளிநாட்டு வர்த்தகர்களிடம் திருப்பூர் பின்ன லாடை சரக்குகளின் பெயர் கெட்டுப் போகிறது.  எனவே, இந்த நடைமுறையை மாற்றி மேற்படி நிறுவனங்களின் ஆவணங்களை நிறுவனங்களிடம் பெற்று ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும். இவ்வாறு நிர்மலா சீத்தாராமனுக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

;