அவிநாசி, அக். 5- அவிநாசி அரசு துவக்கப்பள்ளி அருகில் நீண்ட கால மாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அவிநாசி பழைய பேருந்து நிலையம் பகுதியில் மங்க லம் சாலை பிரிவு அருகே அவிநாசி ஊராட்சிய ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் முன்பிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை உள்ள சாலையில் பூக்கடைகள், பழக்கடைகள், தள்ளுவண்டி உணவகங்கள், காலணிகள் பழுதுபார்க்கும் கடை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டிருந்தன. இத னால், பள்ளிக்கு வரும் குழந்தைகள் மிகுந்த அவதிக்குள் ளாகி வந்தனர். மேலும் கோவை, சேவூர், திருப்பூர், ஈரோடு, சேலம் செல்லும் சாலையாகவும், நகரின் மையப்பகுதியாகவும் உள்ளது. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி யுடன், விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வந்தது. எனவே பள்ளி அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் படி, நெடுஞ்சாலைத்துறையினர் திடீரென ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி அருகில் இருந்த ஆக்கிர மிப்புகளை அகற்றினர்.