tamilnadu

அவிநாசியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிப்பு

அவிநாசி, ஆக. 6 - அவிநாசி அருகே ஆயிரம் ஆண் டுகள் பழமையான பொருட்களை தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் கண்டறிந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் கணியாம்பூண்டி ஊராட்சி வஞ்சிப்பாளையம் அருகே கௌசிகா நதிக் கரையின் ஓரத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை யான முன்னோர்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், விலங்கினத்தின் எலும்புத் துண்டுகள் கண்டறியப்பட் டுள்ளது. அவிநாசி மங்கலம் சாலை யில் கௌசிகா நதியில் பாலம் கட்டு வதற்கான பணிகள் மேற்கொண்ட போது பானை ஓடுகள் அதிக அளவில் கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்துத் தொல்லியல் வர லாற்று ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தொல்லியல் வர லாற்று ஆய்வாளர் முடியரசு அப் பொருட்களைப் பார்வையிட்ட பின் கூறியதாவது, இங்கு சிவப்பு, கருப்பு மற்றும் கருஞ்சிவப்பு நிறமுள்ள வழ வழப்பான பானை ஓடுகள் கிடைத் துள்ளன. மேலும் 2 மி.மீ, 3 மி.மீ அள விலான மெல்லிய தடிமனுடைய சமையலறைக் கலய உடைசல்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இது தவிர இரும்புக் கசடுகளும், விலங்கின எலும்புகளும் கிடைத் துள்ளன. மேலும் வழவழப்பான பந்து போன்ற உருண்டை வெங் கல் கண்டறியப்பட்டுள்ளது. இது கவண் கல் ஆயுதமாகவோ அல்லது எடைக் கல்லாகவோ இருக்கலாம். மாவட்டத் தொல்லியல் துறைக்கு தகவல் தரப்பட்டுள்ளது. சேகரிக்கப் பட்ட தொல்பொருட்களை காப் பாட்சியர் சிவக்குமார் வசம் ஒப்ப டைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;