tamilnadu

img

கே.எம்.நகர் குப்பைக் குழியை மூடக்கோரி வெள்ளியங்காட்டில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக. 7- திருப்பூர் வெள்ளியங்காடு பகுதி யில் கே.எம்.நகர் குப்பைக் கிடங்கை மூடக்கோரி 50ஆவது வார்டு குடியி ருப்புப் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் 10 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50ஆவது வார்டுக்குட்பட்ட அனைத்து குடியிருப்புகளிலும் பத்து நாட்கள் இடைவெளியில் குடி நீர் அரைகுறையாக வருவதை சீர் செய்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். பத்தாண்டுகளுக்கு மேலாக செப்பனிடப்படாமல் குண் டும், குழியுமாக உள்ள அனைத்து வீதிகளின் சாலைகளையும் புதுப் பித்து தார்ச்சாலை அமைக்க வேண் டும். கே.எம்.நகர் பாறைக்குழி குப் பையை ஆறு மாத காலத்தில் மண் போட்டு மூடப்படும் என்று மாநக ராட்சி வாக்குறுதி அளித்து மூன் றாண்டுகள் கடந்து விட்டது. எனவே, இதற்கு நிதி ஒதுக்கி உடன டியாக பாறைக்குழியை மூட வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 50 ஆவது வார்டு மக்கள் பல்வேறு இடங்களில் தனிமனித இடைவெளி யுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகரச் செயலா ளர் டி.ஜெயபால், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், மாநகரக் குழு உறுப்பினர்கள் பி.பாலன், கே.பொம்முதுரை, கிளைச் செயலா ளர்கள் சந்திரசேகர் மற்றும் அப்ப குதி மக்கள் என பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

;