tamilnadu

ரூ.22 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அவிநாசி, செப். 25– அவிநாசி வேளாண்மை உற் பத்தியாளர்கள் கூட்டுறவு விற்ப னைச் சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏல வர்த்தகம் நடை பெற்று வருகிறது. இங்கு புத னன்று நடைபெற்ற பருத்தி ஏலத் திற்கு, மொத்தம் ஆயிரத்து 644 பருத்தி மூட்டைகள் வந்திருந் தன. இதில், ஆர்.சி.எச். பி.டி.ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 100 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ரூ.2 ஆயிரம் வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.22 லட் சத்து 72 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.