tamilnadu

ரூ.16.35 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி, நவ.1- அவிநாசி வேளாண்மை உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதனன்று பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடை பெற்ற ஏலத்திற்கு 977 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில், ஆர்.சி.எச்  ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,500 முதல் ரூ.5,550 வரையிலும், மட்டரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,800 முதல் ரூ.2,500 வரையிலும் ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு ரூ.16 லட்சத்து 35 ஆயி ரம் ஆகும்.