tamilnadu

ஆதார் சேவை மையங்களில் கட்டுப்பாடு: தொழிலாளர்கள் தவிப்பு

திருப்பூர், ஜூன் 30 – திருப்பூரில்  ஆதார் நிரந்த சேவை மையங் களில் ஒரு நாளைக்கு 20 பேர் மட்டுமே அனு மதிக்கப்படுவர் என கடும் கட்டுப்பாடு விதிக் கப்பட்டிருப்பதால் புதிய ஆதார் மற்றும் பழைய ஆதார் திருத்தம் செய்ய வரும் பொது மக்கள் பல நாட்களுக்கு அலைக் கழிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்று பரவல் காரண மாக ஆதார் சேவை மையங்களிலும் நாளொன்றுக்கு 20 பேர் மட்டுமே அனுமதிக் கப்படுவர் என்று அறிவிப்பு செய்து முகப்புப் பகுதியில் ஒட்டி வைத்துள்ளனர். எனினும் புதிய ஆதாருக்கு விண்ணப்பிக்கவும், ஆதார் கார்டில் திருத்தம் செய்யவும் என தினமும் ஏராளமானோர் அந்த சேவை மையங்களுக்கு வருகின்றனர். அங்கு வந் தால் 20 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுத்து அனுமதிப்பதாகவும், மற்றவர் கள் நாளை வரவும் என திருப்பி அனுப்பி விடு கின்றனர். எனினும் மறு நாள் சென்றால், டோக்கன் முடிந்துவிட்டது என அனுப்பி விடுகின்றனர். இவ்வாறு செய்வதால் மாண வர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பொது மக்கள் தங்கள் ஆதார் தேவைக்காக இரண்டு, மூன்று முறை அலைக்கழிக்கப் படுகின்றனர். அதேசமயம் இந்த சேவை மையங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கை யில் மட்டுமே பயனாளிகள் இருக்கின்ற னர். அப்படி இருந்தும் ஏன் மற்றவர் களை அனுமதிப்பதில்லை என்ற கேள்விக் குறியோடு பலர் காத்திருந்து திரும்பிச் செல் கின்றனர். திருப்பூர் புதுக்காலனி பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளியான சந் திரமோகன், பி.எப். கணக்கில் இருந்து பணம் பெற விண்ணப்பித்தபோது, அவரது ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என பிஎப் அலுவலகத்தில் கூறியுள்ளார். அதன் படி ஆதார் எண்ணைக் கொடுத்து விப ரத்தைப் பதிவேற்றினால், அவரது பெயரு டன் அவரது தந்தையின் பெயரும் சேர்ந்து ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்டிருக்கி றது. எனவே அதை ஏற்க முடியாது என்றும், பெயர் திருத்தம் செய்து வரும்படியும் பிஎப் அலுவலகத்தில் கூறியிருக்கின்றனர். இதற் காக முதலில் மண்டல அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கு சென்றால் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் செல்லும் படி அனுப்பியுள்ளனர். அங்கு சென்று பார்த் தபோது 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்ப டுவர் எனக் கூறியுள்ளனர். இவ்வாறு மூன்று நாட்களாக அலைந்து கொண்டிருந்தாலும் ஆதார் கார்டு திருத்தும் பணியை நிறை வேற்ற முடியவில்லை வேதனைப்பட்டார். மேலும், டாஸ்மாக் கடைகளில் எல்லாம் எந்த விதிமுறையும் இல்லாமல் நேரங்காலம் மீறி விற்பனை நடைபெறுகிறது. ஆனால் இப்போதைய நெருக்கடியான நேரத்தில் பிஎப் பணத்தைப் பெறலாம் என தொழி லாளர்கள் விண்ணப்பிக்கும்போது இது போன்ற காலதாமதம் மேலும் மன உளைச் சல் ஆக்குகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் கவனம் செலுத்தி தொழி லாளர்களின் தேவையை உடனடியாக நிறைவேற்ற உரிய ஏற்பாடு செய்ய வேண் டும் என்று கூறினர்.

;