உடுமலை, ஆக. 4- சிலம்பம், களரி போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு உடு மலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி வளாகத்தில் ஞாயிறன்று பாராட்டுவிழா நடைபெற்றது. திருப்பர் மாவட்டம், உடுமலை கிளை நூலகம் எண் இரண்டில் பகத் சிங் சிலம்பம் மற்றும் களரி மார்ஷியல்ஆர்ட்ஸ் சார்பில் ஆசான் வீரமணி தலை மையில் இலவச சிலம்பம் மற்றும் களரி பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பயிற்சி பெற்ற மாணவ மாணவியர்கள் கடந்த 27, 28 ஆகிய தேதி களில் சென்னையில் தமிழ்நாடு சைலாத் சிலம்ப மற் றும் இந்தியன் சைலாத் சார்பில் சிலம்பம் மற்றும் களரி போட்டிகள் நடைபெற்றது. இதில் சிலம்ப ஆசான் சு.வீரமணி தலைமையில் உடுமலை மற்றும் மடத் துக்குளம் பகுதியில் இருந்து 50 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் நடை பெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு 49பேர் பரிசு பெற்றனர். மொத்தம் 94 பரிசுகளைப் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்றனர். இவர்களுக்கு நூலக வாசகர் வட்டம் சார்பில் பாராட்டு விழா ஞாயிறன்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு நூலக வாசகர் வட்ட தலைவர் இ.இள முருகு தலைமை வகித்தார். நூலக வாசகர் வட்ட பொருளாளர் ஈ.சிவக்குமார் முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (தணிக்கை) ப.மு.அகமது சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிலம்ப களரி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களைப் பாராட்டி சான்றி தழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். மாணவ, மாணவியர் தங்களது தனித்திறமைகளை வளர்த் துக் கொள்ள சிலம்ப பயிற்சி உதவும். தன்னம்பிக் கையை வளர்க்கும் என்றார். சிலம்பம் வளர்ந்த விதம் குறித்து சிலம்ப ஆசான் சு.வீரமணி பேசினார். நிறைவாக நூலகர் வீ.கணேசன் நன்றி கூறினார்.