tamilnadu

img

கொரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க சிஐடியு வலியுறுத்தல்

திருப்பூர், செப். 17– கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் உள்ளாட்சி ஊழியர்க ளுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண் டும் என வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் புதனன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத் தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உள்ளிட்ட பலர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, திருப்பூர் மாவட்டத் தில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீரேற்று ஆப்ரேட்டர்கள், தூய் மைப் பணியாளர்கள், தூய்மைக் காவ லர்கள் கொரோனா காலத்தில் அர்ப்ப ணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர்.

குடிநீரேற்று ஆப்ரேட் டர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.2 ஆயிரத்து 600ல் இருந்து ரூ.4ஆயிர மாக வழங்க வேண்டும். தூய்மைக் காவலர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 600 ஆக வும் உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சி ஊழியர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். இதேபோல், உடுமலை ஒன்றியம் புங்கமுத்தூர் ஊராட்சியில் பணி யாற்றி ஓய்வு பெற்ற தூய்மைப் பணி யாளர்களுக்கு ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு வரும் ஓய்வுக்கால பணப்பலனைப் பெற்றுத் தர நடவ டிக்கை எடுக்குமாறும் மனுவில் வலி யுறுத்தப்பட்டிருந்தது.

;