tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி மகளிர் பேரணி

உடுமலை, பிப். 1- குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உடுமலையில் மகளிர் பேரணி நடைபெற்றது. உடுமலை மற்றும் மடத்துகுளம் வட்டார பெண்கள் மற்றும் முற்போக்கு பெண்கள் அமைப்பு சார்பாக இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இந்த சட்டத்தை தமிழகத்தில் நடைமுறை படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் சனிக்கிழமை உடுமலையில் மகளிர் பேரணி நடை பெற்றது. இப்பேரணியானது உடு மலை குட்டைதிடலில் தொடங்கி தளி ரோடு, பழனி ரோடு, கொல்லம்பட் டறை வழியாக சென்று குட்டை திடலை அடைந்தது. அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன் னுத்தாய் பங்கேற்று சிறப்புரையாற் றினார். மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மைதிலி, மாவட்ட செயலா ளர் பவித்ரா, மாவட்ட பொருளாளர் சகிலா, மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் வசந்தி மற்றும் நிர்வாகி கள் மாலினி, சுமதி, வசந்தாமணி, சித்ரா  உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற் பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

;