tamilnadu

ஐடிபிஎல் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு பிடிவாதம்: ஜூலை 7 – 15 வரை விவசாயிகள் தொடர் போராட்டம்

திருப்பூர், ஜூன் 25 – பாரத் பெட்ரோலியம் நிறுவ னத்தின் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை விவசாயிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி நிறைவேற்ற வேண் டும் என மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. எனவே இதற்கு எதிராக ஜூலை 7ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்துவதென இத்திட்டத்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் விவ சாயிகள் தீர்மானித்துள்ளனர். ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட் டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பின் கூட்டம் நாமக்கல் மாவட்டம் படைவீட்டில் திமுக விவ சாயத் தொழிலாளர் அணி மாநில இணை செயலாளர் வை. காவேரி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில துணைத் தலை வர் ஏ.எம்.முனுசாமி, தமிழக விவசா யிகள் பாதுகாப்பு சங்க நிறுவ னர் வழக்கறிஞர் மு.ஈசன், தற்சார்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப் பாளர் இரா.பாலசுப்பிரமணி, காடச்ச நல்லூர் க.செல்லமுத்து, த.வி.ச. மாவட்டச் செயலாளர்கள் சேலம் ஏ.ராமமூர்த்தி, நாமக்கல் பி.பெரு மாள், திருப்பூர் ஆர்.குமார் மற்றும் சங்ககிரி ஆர்.ராஜேந்திரன் ஆகி யோர் கலந்து கொண்டனர். ஐடிபிஎல் திட்டத்திற்கு எதிர்ப்பு பலமாக எழுந்துள்ள நிலையிலும், தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவரது ஏற்பாட் டில் தொழில்துறை அமைச்சரோடு விரிவாகப் பேசி எடுத்துரைத்தும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மத்திய பெட்ரோலியத்துறை அமைச் சரிடம் நேரடியாக மனுக்கொடுத்தும் மத்திய அரசின் கொள்கை முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது மிகவும் வேதனையானதா கும்.எதிர்ப்புகளை வலுவான முறை யில் பதிவு செய்த பின்னும், மத்திய, மாநில அரசுகள் துணையோடு விவ சாய நிலத்தில் குழாய் பதித்திட திட்ட அதிகாரிகள் கொரோனா காலத்தி லும் வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

விவசாய நிலத்தில் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, மாற்று வழியில், சாலை யோரமாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கும் அனைத்து அமைப்புகளையும் கூட்ட மைப்பு இணைத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நோட்டீஸ் அடிப்படையில் சட்டப் போராட்டத்திற்கான நடவடிக்கை களை மேற்கொள்வதென முடிவு எடுக் கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2013- ஆம் ஆண்டு கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை விவசாயிகள் போராடி யதால் சாலையோரமாக கொண்டு செல்வது என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டது போல் தற்போதும் இத்திட்டத்திற்கு தமி ழக அரசு அறிவிக்க வேண்டும். மாற்று வழியில், சாலையோரமாக செயல்ப டுத்த வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி வருகிற ஜுலை 7ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பாதிக்கப்பட்ட விவசாயிகள் வீடு, நிலங்களில் கறுப்புக் கொடி கட்டுவது, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வர் நிலத்திலும் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது. இந்த கோரிக்கையை ஆதரித்து அனைத்து ஜனநாயக சக்திகள் மற்றும் நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டுவது உள்ளிட்ட முடிவுகளை சிறப்பாக செயல்ப டுத்தி, ஒற்றுமையை பலப்படுத்து வோம் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

;