tamilnadu

img

முறையான குடிநீர் கோரி மண்டல அலுவலகம் முற்றுகை

திருப்பூர், ஜூலை 2 – திருப்பூர் மாநகராட்சி 40 மற் றும் 41ஆவது வார்டுக்கு உட் பட்ட பாரதிநகர் பகுதி மக்க ளுக்கு முறையாகக் குடிநீர் வழங் கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி மற் றும் அப்பகுதி மக்கள் நல்லூர் மூன்றாவது மண்டல அலுவல கத்தை வியாழனன்று முற்றுகை யிட்டனர். திருப்பூர் தாராபுரம் சாலை சந் திராபுரம் கிழக்கு பகுதியில் உள்ள பாரதிநகர் 4, 5 வீதிகள் மற்றும் மெயின் வீதியில் தண்ணீர் சரிவர வருவதில்லை. மேற்கண்ட வீதிக ளில் 12 நாட்களுக்கு ஒரு முறை  மட்டும் குறைந்த நேரம் குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது. இத னால் பற்றாக்குறை ஏற்பட்டு மக் கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் இப்பகுதியில் நேரடியாக ஆய்வு செய்து தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்த உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொது மக்கள் வலியு றுத்தினர். மேலும், நல்லூரில் உள்ள மாந கராட்சி மூன்றாவது மண்டல அலு வகத்தை முற்றுகையிட்டப் பொது மக்கள் இந்தக் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகா ரிகளிடம் வற்புறுத்தினர். பொது மக்கள் சார்பாக மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, தெற்கு மாநகரச் செய லாளர் டி.ஜெயபால் ஆகியோர் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் மேற்கண்ட பகு தியில் அமைந்திருக்கும் குடிநீர் தேக்கத் தொட்டியில் இருந்து முறையாக குடிநீர் விநியோகம் செய்ய உடனடியாக நடவ டிக்கை எடுப்பதாக மண்டல அலு வலர்கள் உறுதியளித்தனர்.

;