tamilnadu

img

ஏஇபிசி தலைவர் ஏ.சக்திவேலுக்கு பனியன் தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம்

திருப்பூர், மே 6 - தொழிலாளர்களின் அடிப் படை வேலை நேரத்தை 12 மணி  நேரமாக அதிகரிக்க வேண்டும்  என கூறியிருக்கும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்  கழகத் தலைவர் ஏ.சக்திவே லுக்கு திருப்பூர் அனைத்து பனி யன் தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூர் சிஐடியு அலுவலகத் தில் மே 6 புதனன்று சிஐடியு பனி யன் சங்கத் தலைவர் சி.மூர்த்தி தலைமையில் அனைத்து சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்தில் என்.சேகர் (ஏஐடியுசி),  ஜி.சம்பத், ஏ.ஈஸ்வரமூர்த்தி (சிஐடியு), க.ராமகிருஷ்ணன், எஸ்.பூபதி (எல்பிஎஃப்), பி.விஸ்வநாதன், பி.குண சேகரன் (ஏடிபி), ஏ.பெருமாள், ஏ.சிவசாமி, (ஐஎன்டியுசி), மு.மனோகரன் (எம்எல்எஃப்) ஆர்.முத்துசாமி, எம்.சண்மு கப்பாண்டியன் (எச்எம்எஸ்) ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையில் கூறப்பட்டு இருப் பதாவது:

ஏஇபிசி தலைவர் ஏ.சக்திவேல் 1948ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தில் உள்ள எட்டு மணி நேர வேலைக்கு மாறாக 12 மணி நேர  வேலை என சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு  அளித்துள்ளார். அவர் முன்வைத் துள்ள கோரிக்கைகள் தொழிலா ளர்களிடம் கடும் அதிருப்தி யையும் கோபத்தையும் ஏற்படுத் தியுள்ளது. கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றில் இருந்து விடுபட மக்கள் போராடி  வருகின்றனர். அதன் ஒரு பகுதி யாக கடந்த மார்ச் 25 முதல் நாடு  முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்று வரை  அமலில் உள்ளது. இதனால் திருப்பூர் நகரத்தில் லட்சக்க ணக்கான பனியன், ஆயத்த ஆடை தொழிலாளர்கள் வேலை யில்லாமல், வருமானம் இழந்து சொல்லொனா துயரத்தை அனு பவித்து வருகின்றனர். ஊரடங்கு  காலத்திற்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் வழங்க  வேண்டும் என மத்திய, மாநில  அரசுகளால் அறிவுறுத்தப்பட் டது. ஆனால் ஆயத்தஆடை உற்பத்தியாளர்கள் அரசின் உத்தரவை ஏற்காமல் உதாசீ னப்படுத்தியுள்ளனர். இதனால் தொழிலாளர்கள் பெரும் துய ரத்தில் உள்ளனர்.  

இந்நிலையில், அரசு ஊர டங்கு தளர்வு செய்யப்பட்டு தொழில் துவங்கும்  நிலையில்,  1948 ஆம் ஆண்டு தொழிற் சாலை சட்டத்தில் வேலை நேரத்தை அதிகரிக்க சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரியிருக்கிறார். குறிப் பாக அடிப்படை வேலை நாள் 8 மணி நேரம் என்றி ருப்பதை, 12 மணி  நேரமாக அதிக ரிக்க வேண்டும் எனவும், 8 மணி நேரத்துக்கு மே லான ஓவர்டைம் வேலைக்கு இரட் டைச் சம்பளம் வழங்காமல் சாதா ரண அளவிலேயே சம்பளம் வழங்க வும், வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்ற வரையறையை, 72 மணி நேரம் வேலை செய்யக் கூடிய முறையில் அதிகரிக்கவும் கோரியுள்ளார். இதன்மூலம் ஓவர்டைம் வேலை, இரட்டிப்புச் சம்பளம் என்ற அடிப்படை உரிமையை முழுமையாக நீக்க  வேண்டும் என்று தொழிலா ளர்களுக்கு முற்றிலும் விரோத மான கோரிக்கையை வலியு றுத்தி உள்ளார்.  இது தொழிலாளி வர்க்கம் மகத்தான போராட்டங்களின் மூலம் பெற்ற எட்டு மணி நேர வேலை, ஓவர்டைம் வேலைக்கு இரட்டிப்பு சம்பளம் ஆகிய சட்ட  உரிமையைப் பறிக்கும் முயற்சி யாகும், தொழிலாளர் நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும்.  

கொரோனா நோய் தொற்றை எதிர்த்து உலகமே போராடிக் கொண்டிருக்கும் பேரிடர் காலத்தில்கூட, நோய்த் தொற்றை காரணம் காட்டி எப்படியாவது அரசிடம் சலுகை கள் பெற்றிடவும், தொழிலாளர் களைப் பற்றியோ, சமூகத்தைப் பற்றியோ எவ்வித  அக்கறையும் இல்லாமல் அப்பட்டமான லாப நோக்கத்தை மட்டுமே  கவனத்தில் கொண்டு இக்கோ ரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.  எனவே இத்தகைய தொழி லாளர் நலனுக்கு விரோதமான சுரண்டல் நடவடிக்கைக்கு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வன்மையான கண்ட னத்தை தெரிவித்துக் கொள்வ துடன், ஏஇபிசி தலைவர் ஏ.சக்தி வேலின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என வும் தொழிற்சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

பிற மாநிலத் தொழிலாளர் பிரச்சனை
திருப்பூரில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக வேலை யின்றி வருமானமின்றி தவித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல  முடியாமல் தவித்து வருகின்ற னர். அவர்கள் பல இடங்களில் கூடி ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென போராடி வருகின்றனர். எனவே தமிழக அரசு பொறுப்பில் வெளி மாநில  தொழிலாளர்களை அவர்கள் ஊருக்கு அனுப்பி வைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வும் அனைத்துத் தொழிற்சங்கங் கள் கேட்டுக் கொண்டுள்ளன.

;