உடுமலை, அக். 4- ரயில்வே துறையை தனியா ருக்கு தரும் மத்திய அரசின் நட வடிக்கையைக் கண்டித்து உடு மலையில் ரயில்வே தொழிலா ளர்கள் வெள்ளியன்று கருப்பு நாளாக அனுசரித்தனர். நாடு முழுவதும் உள்ள ரயில்வே துறையை தனியாருக்கு விற்பணை செய்வதற்கான நடவடிக்கையின் முதல் பகுதியாக டெல்லி முதல் லக்னோ வரை இயக்கப்பட்ட தேஜஸ்வி என்ற ரயிலை அக்டோ பர் 4ஆம் தேதி விற்பனை செய்யப் பட்டது. இதனை எதிர்த்தும், வரும் நாட்களில் மேலும் 150க்கும் மேற் பட்ட ரயில்களை தனியாருக்குக் கொடுக்கும் முடிவை மத்திய அரசு மறு பரிசிலனை செய்ய வேண்டும் என்று டிஅர்இயு தொழிலாளர்கள், ரயில்வே துறையின் கருப்பு நாள் என்ற வாசகங்கள் உள்ள அட்டை அணிந்து வேலை செய்தனர். இதன் ஒரு பகுதியாக உடுமலை மற்றும் மடத்துக்குளம் ரயில் நிலை யங்களில் கார்த்திக் சங்கிலி தலை மையில் நடைபெற்ற போராட்டத் தில் எ.ஆர்.விஷ்ணு, பிரதாப், நாக ராஜ், ஜெராடு உள்ளிட்ட தொழிலா ளர்கள் கருப்பு நாள் என்ற வாசகங் கள் உள்ள அட்டை அணித்து வேலை செய்தனர்.