tamilnadu

ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மே 30 – கடந்த இரு மாதங்க ளுக்கும் மேலாக ஊரடங்கு உள்ள சூழ்நிலையில் வாழ் வாதாரம் இன்றி தவித்து  வரும் ஆட்டோ ஓட்டும்  தொழிலாளர் குடும்பங்க ளுக்கு மாதம் ரூ. 7,500  வழங்க வேண்டும். ஊர டங்கு காலத்தில் சிறைபி டிக்கப்பட்ட அனைத்து ஆட் டோக்களையும் விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி திருப்பூரில் ஏஐடி யுசி ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவல கம் உட்பட 32 இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.