tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இடுவாய், முதலிபாளையம் கிராமசபைகளில் தீர்மானம்

திருப்பூர், ஜன. 26 – குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற் கும், என்.பி.ஆர்., என்சிஏ ஆகியவற் றுக்கும் எதிராக திருப்பூர் மாவட்டம் இடுவாய், முதலிபாளையம் ஊராட்சி களின் கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஞாயிறன்று குடியரசு தினத்தை முன்னிட்டு இடுவாய் கிராமத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சிமன்றத் தலைவர் கே.கணேசன் தலைமையில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்பட பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் ஊராட்சிச் செயலர், அலுவலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம் மற்றும் ஊர்ப்பொது மக்கள் சார்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், மதுக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி யும், பொது இடங்களில் மது குடிப் பதை தடுக்கக் கோரியும், தியாகி ரத்தினசாமி நினைவிடத் தில் உள்ள கழிவுநீர்க் கால்வாயை அப்புறப்படுத்தக் கோரியும், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரியும், இடு வாயில் உள்ள குடிநீர் இணைப்புகள், மேல்நிலைத் தொட்டி, குப்பை கூடங் களையும், சாக்கடைகளையும் முறை யாக சுத்தம் செய்திடவும் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் குடியுரி மைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு தமிழ கத்தில் அரசுப் பொதுத்தேர்வு நடத்து வதை ரத்து செய்ய வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல் முதலிபாளையம் ஊராட்சியிலும் பல்வேறு அரசியல்  கட்சியினர், பொது மக்கள் குடியுரி மைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து  தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி னர். அதன் அடிப்படையில் அங்கு  குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு  எதிராக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மங்கலம் ஊராட்சியில் நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில் குடியு ரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் வலி யுறுத்தினர். இது குறித்து ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை மனு அளித்த னர். இந்த கிராம சபை கூட்டத்தில் இஸ்லாமிய பெண்கள் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊத்துக்குளி ஒன்றி யம் ரெட்டிப்பாளையம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் போதிய உறுப்பினர்கள் இல்லாததால் பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

;