tamilnadu

வெள்ளக்கோவில் பிடிஓ நள்ளிரவில் பணிவிடுப்பு வளர்ச்சித்துறை அலுவலர்கள் தொடர் போராட்டம்

 

 

திருப்பூர், ஜூன் 15- வெள்ளக்கோவிலில் ஆளும் கட்சியினரின் நிர்பந்தத் திற்கு அடிபணிந்து வட்டார வளர்ச்சி அலுவலரை நள்ளிர வில் பணி விடுவிப்பு செய்த மாவட்ட நிர்வாகத்தை கண் டித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். வெள்ளக்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணி யாற்றி வந்த க.பிரியா என்பவரை ஜூன் 13ஆம் தேதியன்று நள்ளிரவில் பணிவிடுவிப்பு செய்து திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் உத்தரவு பிறப்பித்தார். இவர் சிறப்பாக பணிபுரிந்தவர் என கடந்த குடியரசு தினத்தில் ஆட்சியரிடம் சான்றிதழ் பெற் றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தற்போது சில அர சியல்வாதிகளின் காழ்ப்புணர்ச்சி காரணமாக நள்ளிரவில் பணி விடுவிப்பு செய்திருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் மீது  ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, ஊழியர் பணி பாதுகாப்பு கோரியும், அரசியல் வாதிகள் அச்சுறுத்தலில் இருந்து ஊரக வளர்ச்சி அலகை விடுவிக்கவும், திருப்பூர் மாவட்டத்தில் 15ஆம் தேதி கருப்புப் பட்டை அணிந்து வேலை செய்வதுடன், மாலை ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்வது, 16 முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாட்கள் கருப்புப் பட்டை அணிந்து உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்வது, கடைசி நாள் தற்செயல் விடுப்புப் போராட்டம் நடத்துவது, வெள்ளக்கோவில் வட்டாரத்தில் அனைத்து ஊழியர்களும் பணியிட மாறுதல் கோரி கடிதம் அனுப்புவது என தொடர் போராட்டம் நடத்துவதாக சங் கத்தின் மாவட்டத் தலைவர் ஞானசேகரன், மாவட்டச் செய லாளர் செந்தில்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

 

 

;