tamilnadu

பீகாரில் இருந்து வந்த 9 பேருக்கு கொரோனா பரிசோதனை

திருப்பூர், ஜூன் 25 - பீகார் மாநிலத்தை சேர்ந்த 9 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக திருப்பூர் முத்துநகர் பகு தியில் தங்கி பானிபூரி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே கொரோனா தாக்குதல் காரணமாக கடந்த ஏப் ரல் மாதம் அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த மாநில மான பீகாருக்குச் சென்று விட்டனர். இரண்டு மாதங்களுக்கு மேலாக சொந்த ஊரில் இருந்த நிலையில் அங்கு போதிய வருமானம் இல்லாததால் மீண் டும் திருப்பூருக்கு வர முடிவு செய்து, பீகாரில் இருந்து ரயில் மூலம் பெங்களூருக்கு வந்து அங்கிருந்து புதனன்று கார் மூலம் திருப்பூருக்கு வந்தனர்.  திருப்பூரில் அவர்கள் ஏற்கனவே தங்கியிருந்த மாநக ராட்சிக்கு உட்பட்ட 23ஆவது வார்டு முத்து நகர் பகுதி யில் வீட்டில் தங்கினர். இந்நிலையில்  இவர்கள் வந்த தக வலை அப்பகுதியைச் சேர்ந்தோர் மாநகராட்சி அதிகாரிக ளுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த  மாநகராட்சி அதிகாரிகள், பீகாரில் இருந்து வந்திருந்த ஒரு பெண், இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேரை  கொரோனா தொற்றுப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு  மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

;