திருப்பூர், அக். 23 - திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவ லக கூட்டரங்கில், வெள்ளியன்று இறுதி வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அங் கீகிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதி கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க. விஜயகார்த்திகேயன் வெளியிட்டார்.
இதில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் 2ஆயி ரத்து 484 வாக்குச் சாவடிகளுடன், புதிதாக ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகள் 9 சேர்த்து மொத்தம் 2ஆயிரத்து 493 வாக்குச் சாவடிகள் வருகின்றன. இதில், 6 வாக்குச்சாவடிகள் பிரிவு ஏற்படுத்துதல் செய்யப்பட உள்ள வாக்குச் சாவடிகள் ஆகும். வேறு கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்படும் வாக்குச் சாவடிகள் 41, பள் ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால் பெயர் மாற் றம் செய்யப்பட்ட வாக்குச் சாவடிகள் 7 ஆகி யவை உள்ளடங்கியுள்ளது.