tamilnadu

108 அவசர ஊர்தி உயிர் காக்கவா? காசு பார்க்கவா? வெள்ளகோவில் பகுதி மக்கள் சந்தேகம்

திருப்பூர், ஜூன் 13- அரசால் இயக்கப்படும் 108 அவசர ஊர்தி பணியாளர்க ளின் செயல்பாடு, விபத்தில் சிக்கியோர் உயிர் காக்கவா? தனியார் மருத்துவமனைகள் காசு பார்க்கவா? என வெள்ள கோவில் பகுதி பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர். திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ளகோவில் அரசு மருத்துவமனை அருகில் கடந்த 10 ஆம் தேதியன்று இரவு 10 மணியளவில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதி யவர் தலையில் அடிபட்ட நிலையில் சாலையோரம் கிடந் துள்ளார்.

இதைப் பார்த்த அவ்வழியே வந்த வாகன ஓட்டி கள் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரி வித்துள்ளனர். ஆனால், 108 அவசர ஊர்தி வெள்ளகோவில் அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தும், விபத்துக்குள்ளான நபரை காப்பாற்ற வரவில்லை. விபத்துக்குள்ளான நபரை பார்த்த பொதுமக்கள் 108 கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததில் அரசு மருத்து வமனை அருகில் தானே விபத்து நடந்துள்ளது. ஆகவே அடி பட்டவரை நீங்களே அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியது தானே, என்று 108 கட்டுப்பாட்டு அறை யில் பணியிலிருந்த நபர் அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.

இப்படி108 பணியாளர்களின் தாமதத்தால் அடிபட்டவர் தலையிலிருநது ரத்தம் வெளியேற அவர் வலியால் அவதிப் பட்டுள்ளார். அதற்குள்ளாக வெள்ளகோவில் காவல் நிலைய அதிகாரிகள், நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து உடன டியாக அரசு மருத்துவமனைக்குள் சென்று 108 அவசர ஊர் தியை வரவழைத்து அடிபட்டவர் சிகிச்சை பெற நடவ டிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும், அடிபட்ட முதியவர் யார்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை

வெள்ளகோவில் நகர, ஒன்றிய பகுதிகளில் யாருக்கே னும் விபத்து ஏற்பட்டு 108 அவசர ஊர்தியை அழைத்தால், தனியார் அவசர ஊர்தியே  அந்த இடத்திற்கு முன்கூட்டியே வருவதாகவும், இலவச 108 அவசர ஊர்தி ஓட்டுநர்கள் தனி யார் அவசர ஊர்தி முதலாளிகளாகவும், முகவர்களாகவும் இருந்து கொண்டு பணம் சம்பாதிப்பதாகவும் குற்றம்சாட் டப்படுகிறது.

முறையான பணிக்கொள்கை, நியாயமான ஊதியம், சரியான கண்காணிப்பு இருந்தால் இந்த மோசடி செயலைத் தடுக்க முடியும். ஆனால், பணியாளர்கள் நலனில் ஏனோ அரசு உரிய அக்கறை காட்டாமல், இது போன்ற புகார் வரும்போது மட்டும் நடவடிக்கை எடுக்கின்றனர். என வேதான், அவசர ஊர்தி பணியாளர்கள் தனியார் மருத்துவ மனகள் கொடுக்கும் கையூட்டு பங்குத் தொகைக்கு, அரசு சேவையை காவு கொடுத்து வருவதாகவும் பொதுமக்கள் மத் தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

இதனால், வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதிகளில் 108 அவசர ஊர்தி சேவை பொதுமக்களுக்கு கிடைப்பதில் உள்ள இடையூறுகளை களைய  மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென வெள்ளகோவில் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;