நெல்லை, மே 26-நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு,சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவி நயினார், வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு என மொத்தம் 11 அணைகள் உள்ளன. இதில் மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு ஆகிய 3 அணைகளில் தண்ணீர் இருப்பு உள்ளது. கடனாநதி, ராமநதியில் தண்ணீர் சுத்தமாக இல்லை. கருப்பா நதி அணை முழுவதும் வறண்டு காணப்படுகிறது.குண்டாறு, அடவிநயினார், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளும் நீரோட்டம் இல்லாததால் வறண்டு விட்டன. தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால்தான் வறண்டு உள்ள9 அணைகளுக்கும் தண்ணீர் வரும். இல்லாவிடில்கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்உள்ளது.