tamilnadu

திருநெல்வேலி, கன்னியாகுமரி முக்கிய செய்திகள்

நெல்லையில் 4,996 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
திருநெல்வேலி, பிப்.8- நெல்லை மாநகராட்சியில் இதுவரை 4,996 கிலோ பிளாஸ்  டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.17.18 லட்சம்  அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணை யர் கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை  உற்பத்தி செய்வது, சேமிப்பது, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. இதன்படி, திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில், பிளா ஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில்  கண்காணிப்புக் குழுவினர் தினமும் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த பிப்.5 அன்று வரை 654 சிறு மற்றும் குறு நிறுவ னங்களில் 106 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும்,  பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ரூ. 1.08 லட்சம் அபராதம்  விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 15 ஆயிரத்து 154 சிறு  மற்றும் குறு நிறுவனங்களில் இருந்து 4ஆயிரத்து 996  கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நிறுவனங்களிடம் இருந்து ரூ.17.18 லட்சம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு கல்தூண் திறப்பு
அருமனை, பிப்.8-  வர்க்கப் போராளி தோழார் ஜே.ஹேமச்சந்திரனின் 12-வது  நினைவு தின பொதுக்கூட்டம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு  கன்னியாகுமாி மாவட்டம் மேல்புறத்தில் நடைபெறுகிறது. மேல்புறம் வட்டாரச் செயலாளர் ஆர்.ஜெயராஜ் தலைமை வகி க்கிறார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாநி லக் குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு,  வட்டாரச் செயலாளர்கள் உரையாற்றுகின்றனர். மேல்புறம்  மார்க்சிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு ள்ள நூற்றாண்டு கல் தூண் சனியன்று திறக்கப்பட உள்ளது.

;