திருநெல்வேலி, டிச.29- நெல்லை மாவட்டம் மா னூரில் உள்ள பெரியகுளம் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டு தற்போது பெய்த மழையின்காரணமாக நிரம்பியது. இதனால் 1500 விவசாயிகள் பயனடைந்த னர். இந்த பெரியகுளத்தில் நீர் நிரம்பியதை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபா கர் சதிஷ் பார்வையிட்டு மலர் தூவினார். பின்னர் மாவட்ட ஆட்சி யர் தெரிவிக்கையில், மானூர் பெரிய குளத்தின் மொத்த பரப்பளவு 448.00.5 ஹெ க்டேர். பொதுப் பணித்துறை க்கு பாத்தியப்பட்ட குளம் இது. நெல்லை மாவட்டத்தில் விஜய நாராயணம் குளத்திற்கு அடுத்த இரண்டாவது பெரிய குளம். 180 நாட்களுக்கு தேவையான கொள்ளளவு தண்ணீர் உள்ளது. இரண்டு போகம் விளையும் என எதிர்பா ர்க்கப்படுகிறது என்றார்.