tamilnadu

மாப்பிள்ளை கைது

திருநெல்வேலி, மார்ச் 5- பாளையங்கோட்டை சமாதான புரத்தை சேர்ந்தவர் முருகன். மரக்கடை நடத்தி வருகின்றார். டிப்ளமோ முடித் துள்ள இவரது மகன் ஜெயக்குமார் (28) தந்தையின் மரக்கடையில் பணி செய்து வருகின்றார். ஜெயக்குமாருக்கும் தூத் துக்குடியினை சேர்ந்த பெண் ஒருவ ருக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டது. வியாழனன்று திருமணம் நடைபெற விருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. மேலும் உறவினர்களும் திருமணத்திற்காக வந்திருந்தனர். இந்நிலையில் ஜெயக்குமாரின் பக் கத்து வீட்டை சேர்ந்த மாலா (28) என்ப வர் பாளை. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் ஜெயக்குமாரும், மாலாவும் காத லித்து வந்ததாகவும், திருமணம் செய்வ தாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி யதில் தான் 6 மாத கர்ப்பமாக இருப்ப தாகவும் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து காவல்துறையினர் நடத் திய விசாரணையில் மாலா கர்ப்பமாக இருப்பது உறுதியானது. மேலும் ஜெயக் குமார் வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றது தெரிய வந்தது.  இதைத் தொடர்ந்து போலீசார் ஜெயக் குமாரை கைது செய்தனர்.