tamilnadu

மணல் திருட்டு: 3 பேர் கைது

திருநெல்வேலி, ஆக.8- நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கேசவன்குளம் அருகே உள்ள குளத்தில் அரசு அனுமதி யின்றி டிராக்டரில் மணல் திருட்டில் ஈடுபட்ட கேசவன்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்த தமிழரசன் (39), நடுத்தெருவை சேர்ந்த மகேந்திரன் (26), தெற்கு தெருவைச் சேர்ந்த தங்கப்பாண்டி (26) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் ஒரு யூனிட் மணல் மற்றும் மணல் திருட்டுக்கு பயன் படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.