tamilnadu

img

எதிர்க்கட்சி இல்லாத... 1ஆம் பக்கத் தொடர்ச்சி

ஒற்றை கலாச்சாரம், ஒரே மொழியை திணிக்க ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை என்கிற குணத்தை பாதுகாக்க வேண்டும்.அத்தகைய போராட்டத்தில் தனது இன்னுயிரை தோழர் அசோக் தியாகம் செய்துள்ளார்.

கர்நாடகா, கோவா குதிரை வியாபாரம்
மத்திய அரசு இந்தியாவை எதிர்க்கட்சியே இல்லாத நாடாக மாற்றவிரும்புகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெற்ற அதிகப்படியான பணத்தை வைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள். கர்நாடகத்திலும், கோவாவிலும் அத்தகைய குதிரை வியாபாரம் நடத்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அந்த கட்சியை சரி செய்வது காங்கிரஸ் கட்சியினரின் பொறுப்பு. ஆனால், எதிர்க்கட்சி இல்லாத இந்தியா என்கிற முழக்கத்துடன் மதச்சார்பின்மையை அழித்து பாசிஸ்ட் இந்துத்துவா ராஷ்டிராவை அமைக்க பாஜக முயற்சி்க்கிறது.

அதேபோல மத்திய அரசு தனக்குஎதிரான எந்த குரலையும் அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளது.தமக்கு எதிராக எழும் குரல்களை ஒடுக்குவதில் தீவிரமாக உள்ளது. இருதினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தின் தலைசிறந்த வழக்கறிஞர்களின் இல்லங்களில் சிபிஐ சோதனை நடந்துள்ளது. அவர்கள் இந்தியாவில் மனித உரிமைகள் குறித்தும், தலித்துகள், சிறுபான்மையினர் நலனுக்காகவும் பல்வேறு மாநிலங்களில் நடந்த கும்பல் படுகொலைகளுக்கு எதிராகவும் வழக்கு நடத்தியவர்கள் மீது சோதனை என்கிற பெயரில்அவர்களது குரல்களை ஒடுக்க பாஜகஅரசு முனைந்துள்ளது. தேசிய நலன்களுக்காக இதை செய்யவில்லை. இந்துத்துவா தேசியவாதத்தின் பெயரால் இவற்றை செய்கிறார்கள்.

சாதி-மத மோதல்கள்
மக்கள் விரோத நடவடிக்கைகள் இந்த அரசில் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அண்மையில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தினார்கள். பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கிறார்கள். நெருக்கடியிலிருந்து விவசாயிகளை மீட்பதற்கு ஏதும் செய்யாமல் அவர்களது பயன்பாட்டில் உள்ள நிலங்களைப் பறித்து பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கொடுக்கிறார்கள்.இத்தகைய தங்களது இந்துத்துவா பாசிஸ்ட் ஆட்சியை தொடர்வதற்காக இந்து-முஸ்லிம், கீழ்சாதி-மேல்சாதி மோதல்களை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் மாண்புகளை அவர்களது இந்துத்துவா ராஷ்டிரத்துக்காக சீர்குலைத்து வருகிறது பாஜக அரசு.ரிசர்வ் வங்கி, சிபிஐ, தேர்தல் ஆணையம், நீதித்துறை, நாடாளுமன்றம் போன்றவற்றை சிறுமைப்படுத்தி வருகிறார்கள்.

மார்க்சிஸ்ட்டுகளால் முடியும் 
நடந்து முடிந்த தேர்தலில் இடதுசாரிகளும் சரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியும் சரி கடுமையான பின்னடைவை சந்தித்திருக்கிறீர்களே, நீங்கள் பட்டியலிடும் இந்த தாக்குதல்களை முறியடிக்கஉங்களால் முடியுமா என்று மற்றவர்கள் கேட்கிறார்கள். நாங்கள் அறிவிக்கிறோம், இந்தியாவை பாதுகாக்கிற மகத்தான போராட்டத்தை இடதுசாரிகளால், மார்க்சிஸ்ட்டுகளால், கம்யூனிஸ்ட் கட்சியால் நடத்த முடியும்.இந்தியா இப்போது தீவிர வலதுசாரி பிற்போக்கு அரசிடம் சிக்கியிருக்கிறது. அதிலிருந்து மீட்டு பாதுகாப்பான-சிறப்பான இந்தியாவை உருவாக்க மக்களை நாடிச் செல்வோம். அவர்களுடன் உரையாடி மாற்றத்தை உருவாக்க இடதுசாரிகளால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமேமுடியும். தேர்தலில் கிடைத்த படிப்பினைகளை பரிசீலித்து எங்களிடம் உள்ள குறைகளை சரி செய்துகொள்வோம். மக்களை அணிதிரட்டும் பணியை மேற்கொள்வோம். இந்தியாவை பாதுகாப்போம், இந்தியாவை மாற்றுவோம் என்கிற முழக்கத்தை முன்னெடுத்து சென்றுகொண்டிருக்கிறோம். அந்த முழக்கத்தின் தியாகிதான் தோழர் அசோக்.

ஹிட்லரை தோற்கடித்தது செங்கொடிதான்
பிரதமரும் உள்துறை அமைச்சரும் இந்தியாவில் இடதுசாரிகளை- சிவப்புக் கொடியை ஒழிக்கப்போவதாக கூறுகிறார்கள். இதற்கு முன்பும் இரண்டாம்உலகப்போரில் ஹிட்லர் இதுபோல் கூறினார். ஆனால், ஜெர்மனியில் ஹிட்லரின் கொடியை இறக்கி செங்கொடி ஏற்றப்பட்டது. அதை செய்தது அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, பிரான்சோ அல்ல;சோவியத் யூனியன். செஞ்சேனைதான் ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டதை உலகுக்கு அறிவித்தது. இந்தியாவில் உங்களுக்கு முடிவு கட்டப்போவது செங்கொடி இயக்கம்தான் என சீத்தாராம் யெச்சூரி முழங்கினார். அவரது ஆங்கில உரையை தீக்கதிர் மதுரைப் பதிப்பு பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன் தமிழாக்கம் செய்தார்.
 

;