tamilnadu

போக்குவரத்து விதிகளை மீறினால் நடவடிக்கை நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி, ஏப்.25-போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்து ஓட்டுநர்கள், வாகன ஓட்டிகள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை மாநகர பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலை வசதிகள் போதுமான அளவில் இல்லை. இதுதவிர பேருந்துநிறுத்தங்களைத் தவிர்த்து பிற பகுதிகளிலும் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லுதல் உள்ளிட்டவிதிமீறல்களால் தேவையற்ற போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன. இதனைத் தடுக்க காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள்கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் மாநகர பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி, காவல் துணை ஆணையர் (போக்குவரத்து-குற்றம்) அறிவுரையின்படி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்த அரசு பேருந்து ஓட்டுநர் மீது போக்குவரத்து வழக்கு கடந்த ஏப்.23-ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனத்தை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக வேகத்தில் இயக்குவது, அதிக சப்தத்துடன் இயக்குவது, பேருந்துநிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தைத் தவிரபிற இடங்களில் வாகனத்தைநிறுத்தி பொதுமக்களை ஏற்றுவது மற்றும் இறக்குவது, பொதுமக்களையோ, மாணவர்களையோ படிக்கட்டில் பயணம் செய்ய அனுமதிப்பது, வாகனம் நிறுத்தக்கூடாத இடங்களில் வாகனத்தை நிறுத்துவது போன்றவிதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்கள் மற்றும்நடத்துநர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;