tamilnadu

சிபிஎம் சார்பில் 7910 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள், முகக்கவசம் வழங்கல்

திருநெல்வேலி, மே 17- திருநெல்வேலி - தென்காசி மாவட்டத் தில் 16 இடைக்கமிட்டிகளின் சார்பில் ரூ. 12,22,700 மதிப்புள்ள அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் மதிய உணவு, முகக்கவசங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை 165 பகுதிகளில் 5476 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. புளியங்குடி கமிட்டியில் 500 பேருக்கு கப சுர குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. சிஐடியு சார்பாக 100 பேருக்கு கபசுர குடிநீர் வழங் கப்பட்டு உள்ளது.  ஸ்பெசல் கட்சிக் கிளை சார்பில் ரூ.37,000 மதிப்பிலான பொருட்கள் 46 குடும்பங்க ளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. மாற்றுத் திற னாளிகள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாதர் சங்கம் சார்பில் ரூ.6,08,550 மதிப்பிலான உணவுப் பொருட் கள் 20 பகுதிகளில் 1139 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. கட்சியின் இதர அமைப்புகளின் சார்பில் ரூ.13,65,000 மதிப்பி லான பொருட்கள் 1295 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.  மொத்தமாக நெல்லை மாவட்டத்தில் ரூ.31,96,250 மதிப்பிலான பொருட்கள் 7910 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
தென்காசி
தென்காசி சுந்தரபாண்டியபுரம் கட்சிக் கிளை சார்பாக 40 நாட்களாக தினசரி 70 பேருக்கும், தென்காசி 2-வது வார்டு கிளை சார்பாக 30 பேருக்கும் மதிய உணவு வழங் கப்பட்டுள்ளது. முக்கூடலில் தினசரி 40 பேருக்கு கடந்த 25 நாட்களாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. சங்க ரன்கோவிலில் தினசரி 100 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. முக்கூட லில் 1000 பேருக்கு முக கவசம் வழங்கப்பட் டுள்ளது. கடையத்தில் 200 பேருக்கு முக கவசம் வழங்கப்பட்டுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக நெல்லை நக ரத்தில் தினசரி 100 பேருக்கு மதிய உணவு கடந்த மே 1 முதல் வழங்கப்பட்டு வருகிறது. த.தீ.ஒ.முன்னணி சார்பில் 250 பேருக்கு முகக் கவசம் வழங்கப்பட்டுள்ளது.

;