tamilnadu

img

இஎஸ்ஐ மருத்துவமனை: தொழிற்சங்கத்தினர் கோரிக்கை

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நிர்வாகத்திடம் திங்களன்று அனைத்து தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன், தொ.மு.ச மாநில அமைப்பு செயலாளர் தர்மன், எஸ்எம்எஸ் மாநில துணை தலைவர் சுப்ரமணியன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எம்.சுடலைராஜ், ஏசிசிடியு கணேசன் ஆகி யோர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது- நெல்லை வண்ணார் பேட்டையில் இயங்கி வரும் இஎஸ்ஐ மருத்துவமனையை கொரோனா தொற்று நோயாளிகளுக்கு கையகப்படுத்துவதற்கு முன்பு தொழிலாளர்க ளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது, மனு கொடுக்கும் போது தோழமை சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.