திருநெல்வேலி, ஜூன் 18- கொரோனாவால் இறந்த மின் ஊழியர் குடும்பத்திற்கு பிரதமர் காப்பீட்டு திட்டத்தில் ரூ.50 லட்சம் வழங்கிட வேண் டும், கொரோனாவால் பாதித்த சிவப்பு மண்டலப் பகுதிகளில் 33 சதவீத அடிப்படையில் சுழற்சி முறையில் பணிபுரிய அனும திக்க வேண்டும், மின் ஊழியர் களுக்கு முகக்கவசம். கையுறை. கிருமிநாசினியை வாரியமே நேர டியாக வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கையை வலி யுறுத்தி பாளை மகாராஜா நகர் மின்வாரிய அலுவலகம் முன்பு சிஐடியு தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு சங்கம் சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்டதலைவர் எம்.பீர் முகமதுஷா தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் வண்ண முத்து ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத் தில் மத்திய அலுவலர் சங்க கோட்ட செயலாளர் சுப்பிரமணி யன், நகர்ப்புற கோட்டத் தலை வர் முத்தையா, வள்ளியூர் கோட்டத் தலைவர் ராமசுப்பிர மணியன், கிராமப்புற கோட்டச் செயலாளர் தளபதி, டிஎல்சி கோட்டச் செயலாளர் வெங்கட சுப்ரமனியன், திட்ட துணைச் செயலாளர் கந்தசாமி, உற் பத்தி வட்ட பொருளாளர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.