tamilnadu

img

நெல்லை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி

திருநெல்வேலி, மே 24-நெல்லை  நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் சா.ஞானதிரவியம் அதிமுக வேட்பாளர் பால் மனோஜ்பாண்டியனை விட 1லட்சத்து 85ஆயிரத்து 457 வாக்குகள் அதிகம் பெற்று எம்.பி.ஆனார்.நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் சா.ஞானதிரவியம், அதிமுக சார்பில் பால் மனோஜ் பாண்டியன், அமமுக சார்பில் மைக்கேல் ராயப்பன்,நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா, மக்கள் நீதி மையம் சார்பில் வெண்ணி மாலை உட்பட 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் ,இதில் வாக்கு எண்ணிக்கையின் போது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் சா.ஞானதிரவியம் 5 லட்சத்து 22ஆயிரத்து 623 ஓட்டுக்கள் பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் பால்  மனோஜ்  பாண்டியன் 3 லட்சத்து 37ஆயிரத்து 166 ஓட்டுக்கள் பெற்றார் .இதில் சா.ஞான திரவியம் அதிமுக வேட்பாளரை விட 1லட்சத்து 85ஆயிரத்து 457 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் ,இவர் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்ட பிறகு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான ஷில்பா சான்றிதழை வழங்கினார்.

;