திருநெல்வேலி, செப்.15- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் சிவகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அனைத்து வார்டுகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். 14ஆவது வார்டு மற்றும் சிவராமலிங்கபுரம் வடக்குத் தெரு வில் உள்ள பெண்கள் கழிப்பி டத்தைச் சீரமைக்க வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை அனைத்து சாக்கடைகளையும் சுத்தம் செய்ய வேண்டும். பேருந்து நிலைய வளா கத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். சிவராமலிங்க புரம் வடக்குத் தெருவில் இடிந்த பாலத்தை உடனே புதுப்பித்துக் கட்டவேண்டும். கோம்பையாறு குடிநீருக்கு மும்முனை மின்சார இணைப்பு வழங்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி சிவகிரி பேரூராட்சி அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலாளர் எஸ். சிவசுப்பிரமணி யன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர்கள் ஆர்.கருப்பையா, எம்.ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசுதேவ நல்லூர் ஒன்றிய செயலாளர் இரா. நடராசன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.நடராஜன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எம்.ராமசுப்பு, வி.சுப்பிரமணியன் ஆகியோர் பேசி னர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் கோரிக்கை மனுவை பேரூராட்சி தலைமை எழுத்தர் சுதாவிடம் கட்சி நிர்வாகிகள் வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கே.எம்.கிருஷ்ணன், குருசாமி, ஜனநாயக மாதர் சங்க செயலாளர் சுப்பு லட்சுமி, மாற்றுத்திறனாளிகள் பேர வைத் தலைவர் சக்தி, ஆட்டோ ஓட்டுநர் சங்கச் செயலர் சக்திவேல், செ.மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.