tamilnadu

விபத்தில் தூய்மை பணியாளர் பலி

திருநெல்வேலி, ஆக.31- மானூர் அருகே வடக்கு வாகைக் குளத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (49). இவர் நெல்லை மாநகராட்சியில் தற்கா லிக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று அதிகாலை தனது உறவினரான எட்வின் (18) என்பவருடன் மொபட்டில் சென்றார். அப்போது சேதுராயன்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே குறுக்கே நாய் பாய்ந்து ஓடியதால் நிலைதடுமாறிய மொபட் சாலையில் கவிழ்ந்தது.  இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார். எட்வின் பலத்த காயத்துடன் பாளை யங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து மானூர் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.