tamilnadu

10-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணில்  குறைகள் இருந்தால் விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி, ஆக.17- கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு பள்ளித்தேர்வு அடிப்படையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் வெளி யிடப்பட்டது. இதனால், மதிப்பெண் குறை வாக இருப்பதாக கருதி மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க முடியாது. ஆனால், பள்ளித்தேர்வில் அதிக மதிப் பெண் பெற்றும், பொதுத்தேர்வில் பாட வாரியாக மதிப்பெண் குறைந்திருந்தால், மறு ஆய்வு செய்ய விண்ணப்பிக்கலாம்.  எனவே மாணவ- மாணவிகள் மதிப் பெண்ணில் எதுவும் குறைகள் இருந்தால் ஆக.17-ம் தேதி முதல் 25-ம் தேதிக்குள் அவரவர் பள்ளி தலைமை ஆசிரியர் வழி யாக குறைதீர்க்கும் படிவத்தினை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மாணவர்க ளின் கோரிக்கை முறையாக பரிசீலிக்கப் பட்டு தலைமை ஆசிரியர் வாயிலாக முடி வுகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப் படும். மேலும் தற்காலிக மதிப்பெண் சான் றிதழ் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மூலமாக 21-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

;