tamilnadu

img

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம்

திருநெல்வேலி, ஆக.27- நெல்லை மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். வண்ணார் பேட்டை அலுவலகத்தில் நிலுவை சம்பளத்தை வழங்கக் கோரி 2வது நாளாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜகோபால், மாவட்ட பொருளாளர் பிச்சுமணி முன்னிலை வகித்தனர். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.சங்கரநாராய ணன் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் போராட்டத்தை ஆதரித்துப் பேசினர்.