tamilnadu

img

ரூ.5000 நிவாரண நிதி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி,ஜூலை 7- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் சார்பாக ஊரடங்கு கால பாது காப்பு நிதி ரூ.5000 வழங்கிட வும், ஊரக வேலையை பேரூ ராட்சி பகுதிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி நெல்லை ஆட்சியர் அலுவலகம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்ட துணை தலைவர் பி. தியாகராஜன், சி.பி.எம் பாளை தாலுகா செயலாளர் பா.வரகுணன், வாலிபர் சங்க நிர்வாகி கருணா ஆகியோர் பேசினர். ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வீரவநல்லூரில் கிராம நிர்வாக அதிகாரி அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் ஒன்றிய செய லாளர் மாசானம் தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கற்ப கம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பாலு.சரவணன், முருகன் உள்பட 25 பேர் கலந்து கொண்டனர். போரா ட்டத்தில் கண்களில் கருப்பு துணி கட்டியும் கைகளில் கோரிக்கை பதாகைகளை ஏந்தியும் கோஷமிட்டனர். கிராம நிர்வாகஅதிகாரி மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு நேரடி யாக கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு  மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

;