tamilnadu

முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஜாக்டோ - ஜியோ கோரிக்கை மனு

திருநெல்வேலி, ஏப்.29 -ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு நெல்லை மாவட்ட கிளை சார்பில் திங்களன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் போது தனி ஊதியம்ரூ.1000 வழங்கப்பட்டது. கடந்த 2019 மார்ச் மாதம் நடைபெற்ற இறுதி கற்பிப்பு மானிய கணக்கு சரிபார்ப்பின் போது(குகூழு) பிடித்தம் செய்யப்பட்டது.மேலும் 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ - ஜியோகாலவரையற்ற வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதால் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 1.4.2019-ல் போடவேண்டிய வருடாந்திர ஊதியஉயர்வு 8 நாட்கள் தள்ளி சென்றது உள்ளிட்ட பல்வேறு நிதி சார்ந்த கோரிக்கைகள் குறித்து  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (ஊநுடீ) மற்றும் மாவட்ட உதவி கருவூல அலுவலர் (ஹனுகூடீ) ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கைமனு அளித்தனர்.நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், திங்களன்று நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டத்தில்இடைநிலை ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டுகருவூல கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தை திரும்பப் பெற்று வழங்க அனைத்து வட்டாரக் கல்வி அலுவலருக்கும் உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.

இதுவரை சரண்டருக்கு தனி ஊதியத்தையும் சேர்த்து பணப்பலன் பெற்றுக் கொடுக்காத வட்டாரக் கல்வி அலுவலர்களும் இனிமேல் பெற்று வழங்க மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டார கல்விஅலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும்என தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறை ஆணையை சுட்டிக்காட்டி முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலம் வழங்கப்பட்டளள தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்(சுகூஐ) மூலம் பெறப்பட்ட சரண்டருக்கு தனி ஊதியம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்ற தகவலின் அடிப்படையில் முதன்மைக்கல்வி அலுவலர் கூறினார்.மேலும் ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டதால் வருடாந்தர ஊதிய உயர்வு 8 நாட்கள் தள்ளிஅனைத்து வட்டாரங்களிலும் ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அடிப்படை விதி 24 (6) க்கு முரணாகவும் 1988-ல் வெளியிடப்பட்ட அரசாணைக்கு முரணாகவும் உள்ளது எனக் கூறியபோது, இதுகுறித்து முறையாக விசாரித்து ஓரிரு நாட்களில் தகவல் தெரிவிப்பதாக கூறினர். இச்சந்திப்பின் போது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலாளர் சோ.முருகேசன், நெல்லை மாவட்டச் செயலாளர் செ.பால்ராஜ், தலைவர் பி.ராஜ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் மு.பிரம்மநாயகம், மானூர் வட்டார துணைப் பொறுப்பாளர் சீனிவாசன், வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மு.சுப்பு, வேலைவாய்ப்புத் துறை சங்க மாநிலச் செயலாளர் மார்த்தாண்ட பூபதி, உடற்கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியர் சங்க மாநிலப் பொருளாளர் பெரியதுரை, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;